Mask, The Family Man This Week's Release
கோலிவுட் செய்திகள்

கவினின் `மாஸ்க்' முதல் Raj & DKவின் `The Family Man S3' வரை இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ!

இந்த வாரம் ஓடிடியில் Raj & DKவின் `The Family Man S3 உள்ளிட்ட சீரிஸ் மற்றும் தியேட்டர்களில் கவினின் `மாஸ்க்' முதல் ஆக்ஷன் படமான `Sisu: Road to Revenge' வரை பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

Johnson

Series: Nadu Center (Tamil) Jio Hotstar - Nov 20

Nadu Center

நாராயணன் இயக்கத்தில் ரெஜினா, சசிக்குமார் நடித்துள்ள சீரிஸ் `நடு சென்டர்'. கூடைப்பந்து வீரர் ஒருபுது பள்ளிக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் சவால்களே கதை.

The Family Man S3 (Hindi) Prime - Nov 21

The Family Man

ராஜ் & டிகே இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள சீரிஸ் `The Family Man S3'. இந்த முறை ஸ்ரீகாந்துக்கு வரும் சவால்கள் என்ன என்பதே கதை.

OTT: Champagne Problems (English) Netflix - Nov 19

Champagne Problems

Mark Steven Johnson இயக்கியுள்ள படம் `Champagne Problems'. விலைமதிப்பற்ற ஷாம்பெய்ன் ஒன்றுக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணமே கதை.

Train Dreams (English) Netflix - Nov 21

Train Dreams

Clint Bentley இயக்கியுள்ள படம் `Train Dreams'. தன் மனைவி மக்களை பிரிந்து பணியாற்றும் ஒருவரின் கதை.

Post Theatrical Digital Streaming: Back to Black (English) Netflix - Nov 17

Back to Black

`Fifty Shades of Grey’ பட இயக்குநர் Sam Taylor-Johnson இயக்கிய படம் `Back to Black'. ப்ரிட்டிஷ் இசைக்கலைஞர் Amy Winehouse பற்றிய பயோபிக்காக உருவாகியிருக்கிறது படம்.

Thandakaaranyam (Tamil) Prime - Nov 19

Thandakaaranyam

அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம் `தண்டகாரண்யம்'. பழங்குடிகள் வாழ்வில் உள்ள சிக்கலை பேசும் படம்.

The Roses (English) Jio Hotstar - Nov 20

The Roses

Jay Roach இயக்கத்தில் Benedict Cumberbatch, Olivia Colman நடித்த படம் `The Roses'. கணவன் - மனைவிக்குள் ஏற்படும் விரிசலே கதை.

Bison (Tamil) Netflix - Nov 21

Bison

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த படம் `பைசன்'. ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை பற்றிய கதை.

Diesel (Tamil) Sun NXT - Nov 21

Diesel

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்துள்ள படம். டீசல் சார்ந்த சந்தை, அதன் மறைமுக அரசியல் பற்றி பேசும் படம்.

The Bengal Files (Hindi) Zee5 - Nov 21

The Bengal Files

விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய படம் `The Bengal Files'. ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்.

Homebound (Hindi) Netflix - Nov 21

Homebound

நீரஜ் கெய்வான் இயக்கிய படம் `Homebound'. கொரோனா சமயத்தில் ஊர் நோக்கி செல்லும் இரு நண்பர்களை பற்றிய கதை.

Theatre: Mask (Tamil) - Nov 21

Mask

விகர்ணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் `மாஸ்க்'. ஒரு ஹெய்ஸ்ட் படமாக உருவாகியுள்ளது.

Middle Class (Tamil) - Nov 21

Middle Class

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த், விஜயலட்சுமி நடித்துள்ள படம் `மிடில் க்ளாஸ்'. ஒரு நடுத்தர குடும்பத்து வாழ்க்கையில் வரும் சிக்கல்களே கதை.

Yellow (Tamil) - Nov 21

Yellow

ஹரி மகாதேவன் இயக்கத்தில் பூர்ணிமா ரவி நடித்துள்ள படம் `யெல்லோ'. ஒரு பெண்ணின் பயணத்தை பற்றிய படம்.

12A Railway Colony (Telugu) - Nov 21

12A Railway Colony

அல்லரி நரேஷ் நடித்துள்ள படம் `12A Railway Colony'. ஹீரோவுக்கு தோன்றக்கூடிய விஷயங்களை பிறர் நம்ப மறுக்கிறார்கள். அதை பற்றி அறிய முற்படும் ஹீரோவின் கதை.

Premante (Telugu) - Nov 21

Premante

ப்ரியதர்ஷி, ஆனந்தி நடித்துள்ள படம் `Premante'. கணவரின் செயல்பாடுகளை சந்தேகிக்கும் மனைவி என்ன தெரிந்து கொள்கிறார் என்பதே கதை.

Eko (Malayalam) - Nov 21

Eko

டிஞ்சித் இயக்கியுள்ள படம் `Eko'. மலையில் வசிக்கும் சிலரின் வாழ்வில் வரும் பிரச்சனைகளே கதை.

Vilaayath Budha (Malayalam) - Nov 21

Vilaayath Budha

ஜெயன் நம்பியார் இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள படம் `Vilaayath Budha'. கடத்தல் ஒன்றில் குருவுக்கும் சிஷ்யனுக்குமான மோதலே கதை.

120 Bahadur (Hindi) - Nov 21

120 Bahadur

ஃபர்ஹான் அக்தர் நடித்துள்ள படம் `120 Bahadur'. மேஜர் சைத்தான் சிங் என்பவரது பயோபிக்காக உருவாகியுள்ளது.

Mastiii 4 (Hindi) - Nov 21

Mastiii 4

விவேக் ஓபராய், ரிதேஷ் தேஷ்முக் நடித்துள்ள படம் `Mastiii 4'. தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து தப்பிக்க நினைக்கும் மூன்று கணவர்களின் கதை.

Wicked: For Good (English) - Nov 21

Wicked For Good

Jon M. Chu இயக்கியுள்ள படம் `Wicked: For Good'. எல்ஃபா - க்ளிண்டா என்ற இரண்டு மாந்த்ரீக பெண்கள் பற்றிய கதை.

Sisu: Road to Revenge (English) - Nov 21

Sisu Road to Revenge

Jalmari Helander இயக்கி 2022ல் வெளியான `Sisu' படத்தின் அடுத்த பாகமாக உருவாகியிருக்கிறது `Sisu: Road to Revenge'. இம்முறை இந்த முன்னாள் பின்லாந்து இராணுவ வீரர் யாரை எல்லாம் கொள்கிறார் என்பதே கதை.