தென்னிந்தியாவின் தாயான தமிழ் சினிமா தற்போது பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ் சினிமாவை மீட்டெடுக்கும் பொறுப்பு வெற்றி பெறவுள்ள நிர்வாகிகளுக்கு உள்ளது. நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை இயக்குநர் பாரதிராஜா தொடங்கியது சரியான நடவடிக்கை கிடையாது. தவறு நடக்கும் போது அதை சரிசெய்ய வேண்டிய பொறுப்பில் இருந்து தப்பும் முயற்சியாகத்தான் இதை பார்க்க முடியும்” எனத் தெரிவித்தார்.