சினிமா

இனிதே நடந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் - வெளியான புகைப்படங்கள்!

சங்கீதா

திரைப்பட நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான ஹரிஷ் கல்யாண் திருமணம் சென்னை அருகே திருவேற்காட்டில் விமரிசையாக நடைபெற்றது.

‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம், கடந்த 2010-ம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யான். தொடர்ந்து ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்தும் அவரது நடிப்பில் புதிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்து தகவல் வெளியிட்டார். நர்மதா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்று, அவரது புகைப்படத்துடன் ஆயுதபூஜை அன்று தனது சமூகவலைத்தளத்தில் போஸ்ட் ஒன்று வெளியிட்டார். தற்போது இவர்களது திருமணம் திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இந்து முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது.

பெற்றோர் மற்றும் உறவினர்கள், சினிமா நட்சத்திரங்கள் முன்பு ஹரிஷ் கல்யாண் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.