சினிமா

கமல் பாணியில் அரசியல் விமர்சனத்தில் இறங்கியுள்ள பிரகாஷ்ராஜ்

கமல் பாணியில் அரசியல் விமர்சனத்தில் இறங்கியுள்ள பிரகாஷ்ராஜ்

webteam

கமல் பாணியில் நடிகர்  பிரகாஷ்ராஜூம் ட்விட்டரில் நடப்பு அரசியலை விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை விவகாரத்தில் மத்திய அரசும் பிரதமர் மோடியும் மெளனம் காத்து வருவதை கடுமையாக விமர்சித்திருந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். ஆளும் காங் கட்சி சார்பில் கர்நாடகாவில் நவம்பர் 10-ம் தேதி திப்பு சுல்தான் ஜெயந்தி விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திப்பு சுல்தானை மாவீரர் என ஏற்க முடியாது என்றும் அவர் இந்து மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்றும் திப்பு  பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதை ஏற்க முடியாது என்றும் பாஜக கூறி வருகிறது.

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகளின் அவலநிலை, இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம், சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகளின் வளர்ச்சி போன்றவற்றில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தலாம் என்று கூறியுள்ளார். அதைவிடுத்து, தற்போது வாழும் தங்களுக்கு தொடர்பில்லாத திப்புசுல்தான், தாஜ்மஹால் போன்றவற்றின் பழைய வரலாறுகளை எல்லாம் தோண்டி எடுத்து, வெறுப்பை ஏற்படுத்துவது எதற்காக? என்று பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.