சினிமா

அஜய் தேவ்கானால்தான் திருமணம் செய்யாமலிருக்கிறேன்... நடிகை தபு தடாலடி

அஜய் தேவ்கானால்தான் திருமணம் செய்யாமலிருக்கிறேன்... நடிகை தபு தடாலடி

webteam


25 ஆண்டுகளாக  திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய்தேவ்கன்  தான் காரணம் என நடிகை  தபு அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார். 


மும்பை மிரருக்கு பேட்டியளித்த, அவரிடம் ஏன் இன்னும் திருமணம்  செய்யாமல் இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.  அஜய்  தேவ்கானை  கடந்த 25 ஆண்டுகளாகத் தெரியும். நான் திருமணம்  செய்யாமல் இருப்பதற்கு காரணம் அவர் தான்  நானும், அவரும் 25  ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். அஜய்தேவ்கன்  எனது ஒன்றுவிட்ட சகோதரர் சமீர் ஆர்யாவின் நண்பர். எனது  வாழ்க்கை தொடக்கத்தில் இருந்தே அஜய்தேவ்கன் என்னுடன் ஒன்றாக  இருந்தார். எங்கு சென்றாலும் அவர் என்னுடன் வருவார். யாராவது  என்னை கேலி செய்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார். அவர்களை  பிடித்து மிரட்டுவார். என்னுடன் இருந்த தருணங்களை அவர்  உணர்வார். அவரால்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல்  இருக்கிறேன். அதனால் எனக்கு வருத்தம் இல்லைன் ’என அவர்  தெரிவித்துள்ளார். தனது முதல் படத்தில் அஜ்ய் தேவ்கானுடன் ஜோடி  சேர்ந்தவர் தபு. 


நடிகர் அஜய்தேவ்கன் 1999-ம் ஆண்டு இந்தி நடிகை கஜோலை  காதலித்து திருமணம் செய்து கொண்டவர். கஜோல் தமிழில்  மின்சாரக்கனவு படத்தில் நடித்தவர். தற்போது தனுஷுடன்  வேலையில்லாபட்டதாரி-2 படத்தில் நடித்து இருக்கிறார்.  அவர்களுக்கு  2 குழந்தைகள் உள்ளனர்  இந்த நிலையில் நடிகை தபு தான் திருமணம்  செய்யாமல் இருப்பதற்கு அஜய்தேவ்கன் தான் காரணம் என  கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
தற்போது 45 வயதான தபு இருவர், கண்டுகொண்டேன்,  கண்டுகொண்டேன், காதல்தேசம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து  இருக்கிறார்.