மும்பையில், தான் வசிக்கும் வீட்டுக்கு அருகில் மேலும் ஒரு வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளார், நடிகை டாப்ஸி.
தமிழில், ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 உட்பட சில படங்களில் நடித்த டாப்ஸி, இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் அவரை கவனிக்க வைத்தன. இதையடுத்து மேலும் பல இந்தி படங்களில் நடித்தார். இப்போது, தட்கா, மிஷன் மங்கள், ஷாந்த் கி ஆங்க் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த வருடம் மும்பை புறநகர் பகுதியில் சில கோடி ரூபாய்க்கு மூன்று படுக்கையறையை கொண்ட வீடு ஒன்றை வாங்கினார். இந்த வீட்டில் வசித்து வந்த அவர், இப்போது அதே பகுதியில் மற்றொரு வீட்டையும் வாங்கியுள்ளார். இந்த வீட்டின் உள் அலங்கார வேலைகளை அவரது சகோதரி ஷாகன் செய்துள்ளார். வீட்டுக்கான விளக்குகள், மரச்சாமான்கள் உள்ளிட்டவற்றை அவர் ஸ்பெயினில் இருந்து வாங்கியுள்ளார்.