சினிமா

டாப்ஸியின் முதல் காதல் இதுதானாம்!

டாப்ஸியின் முதல் காதல் இதுதானாம்!

webteam

தமிழில், ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உட்பட சில படங்களில் நடித்தவர் டாப்ஸி. தெலுங்கிலும் நடித்துள்ள இவர், இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்திவருகிறார். இப்போது வருண் தாவனுடன் ’ஜுத்வா 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் சல்மான் கான் நடிப்பில் 1997-ல் வெளியான ஜூத்வா படத்தின் அடுத்த பாகம். இதில், 1990களில் பிரபலமான இந்தி பாடல்களின் டியூன்களில் பாடல்கள் இடம்பெறுகிறது. இந்தப் பாடல்களுக்கு நடனம் ஆட இருக்கிறார் டாப்ஸி.

இதுபற்றி அவர் கூறும்போது, சில வருடங்களுக்கு முன், தமிழ் படம் ஒன்றுக்கு நடனம் ஆடினேன். பிறகு நடனம் ஆடவில்லை. நடனம் தான் எனது முதல் காதல். ஆறு வயதில் இருந்தே கிளாசிக்கல் மற்றும் மேற்கத்திய நடனங்களை கற்றிருக்கிறேன். இப்போது ஜூத்வா 2 படத்தில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று டாப்ஸி கூறியுள்ளார்.