சினிமா

எதிர்ப்பவர்களை பேச அனுமதிக்காதது ஜனநாயகமா?: டி.ஆர். கேள்வி!

எதிர்ப்பவர்களை பேச அனுமதிக்காதது ஜனநாயகமா?: டி.ஆர். கேள்வி!

webteam

தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவில் விஷாலை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை பேச அனுமதிக்காதது ஜனநாயகமா? என நடிகர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் விஷால் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக அச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் பார்வையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், துணைத் தலைவர் பிரகாஷ் ராஜ், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, டி.ராஜேந்தர், சேரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுக்குழுவின் போது விஷால் தரப்பினர் மற்றும் சேரன் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், “தமிழ் திரைப்பட உலகுக்கு தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எல்லாம் தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பக்கபலமாக இருக்கிறது என விதிமுறைகள் சொல்கின்றன. 145 தயாரிப்பாளர்களுக்கு மானியம் கிடைக்க வேண்டும். அரசை எதிர்த்து விஷால் குரல் கொடுக்கப்போகிறார் என்றால், தார்மீகப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரு முன்னாள் நிர்வாகி பேசுகிறார். அவருக்கு ஒலிபெருக்கியை தர மறுக்கிறார்கள். இது ஜனநாயகமா?” என்று கேள்வி எழுப்பினார்.