இலங்கை மக்களை சிவனும், அல்லாவும், ஏசுவும் காக்க வேண்டும் என உருக்கமாக வேண்டிய நடிகர் டி.ராஜேந்தர், இதுகுறித்த பாடலையும் வெளியிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம், இந்திய மக்களுக்கு நேரிடக்கூடாதென சிவபெருமானையும், அல்லாவையும், ஏசுநாதரையும் வேண்டுவதாக திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கையில் மக்கள் போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ள பாடலை அறிமுகப்படுத்தினார். மேலும், இலங்கையிலிருந்து அடைக்கலம் தேடி தமிழ்நாட்டுக்கு வருவோருக்கு, அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
டி ராஜேந்தர் வெளியிட்டுள்ள அந்த பாடலின் வரிகளில், "நாங்க வாழணுமா சாகணுமா சொல்லுங்க, கவர்மெண்ட் சொல்லுங்க. நீங்க ஆட்சி செஞ்சு கிழிச்சது போதும் ஒடுங்க...இலங்கையை விட்டு ஓடுங்க. 69 லட்சம் பேர் போட்டான் பாரு ஓட்டு, இப்ப அடுத்த வேளை சோத்துக்கே படுகிது பாரு பாடு. நாசமாக போச்சுது பாரு நாடு, உயிர் வாழுறதே ரொம்ப ரொம்ப பாடு, பெரும் பாடு" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.