சினிமா

''இதுவரை 20 ஆயிரம் கோடிக்கு மேல் விபிஎஃப் கட்டணம் செலுத்தியிருக்கிறோம்'' - டி. ராஜேந்தர்

Sinekadhara

தயாரிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் VPF கட்டணத்தை சில திரையரங்கு உரிமையாளர்களுக்கு டிஜிட்டல் நிறுவனங்கள் வழங்குவதாக டிராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் VPF பிரச்னையில் டிஜிட்டல் நிறுவனங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். அத்துடன் தமிழக அரசு திரைப்படங்களுக்கு விதிக்கும் 8 சதவீத உள்ளூர் பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும் என்றும், மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

மேலும் ஜி.எஸ்.டி வரி குறைப்பிற்காக பிரதமரை சந்தித்து பேசவும் தயாராக இருப்பதாக டி.ராஜேந்தர் தெரிவித்தார். அதேபோல் திரையரங்குகள் விதிக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை மாற்றி, 30 ரூபாய், 50 ரூபாய், 70 ரூபாய் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். அத்துடன் ஆன்லைன் டிக்கெட் பதிவுக்காக வசூலிக்கப்படும் தொகையில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் டி ராஜேந்தர் தெரிவித்தார்.