நடிகர் விஷாலுக்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் விஷாலுக்கு எதிராக நடிகர் சேரன் உட்பட சிலர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க டி.ராஜேந்தர் வந்திருந்தார். பிறகு இதுதொடர்பாக டி.ராஜேந்திரர் மற்றும் சேரன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டி.ராஜேந்திரர், தயாரிப்பாளர் சங்கதிற்கு விஷால் இதுவரை என்ன செய்துள்ளார்? என்று கேள்வி எழுப்பினார்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறினார். இதுபோன்று அரசியல் தேர்தலில் விஷால் போட்டியிட்டால், தயாரிப்பாளர்களுக்கு எப்படி மானியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில் விஷாலின் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வேட்புமனு நிகாரிக்கப்பட்டதை அடுத்து சேரன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.