சினிமா

“வாக்களிக்க முடியாமல்போனது சிம்புக்கு வருத்தம்” - டி.ராஜேந்தர்

“வாக்களிக்க முடியாமல்போனது சிம்புக்கு வருத்தம்” - டி.ராஜேந்தர்

webteam

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  மாலை 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். வாக்கு இயந்திர கோளாறு, சிறுசிறு வன்முறைகள் எனப் பல இடங்களில் பரபரப்பு காணப்பட்டது. 

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ண ஒரு மாதகாலம் இடைவெளி ஏன் எனக் கேள்வி எழுப்பினார். 

வாக்களிக்க சிம்பு ஏன் வரவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த டி.ராஜேந்தர், ''சிம்பு முக்கிய வேலையாக லண்டனில் உள்ளார். சென்னையில் இருந்திருந்தால் நிச்சயம் வந்திருப்பார்.  

சென்னை வருவதற்காக 15, 16 ஆகிய தேதிகளில் டிக்கெட் பதிவு செய்ய முயற்சி செய்தோம். ஆனால் கிடைக்கவில்லை. வாக்களிக்க முடியாததால் சிம்பு வருத்தப்பட்டார்'' என்று தெரிவித்தார்.