சினிமா

நயன்தாரா படத்திற்கு 240 கோடியா?

நயன்தாரா படத்திற்கு 240 கோடியா?

webteam

நயன்தாரா நடித்து வரும் புதிய படத்திற்கு 240 கோடி பட்ஜெட் செலவிடப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழில் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா பிறமொழிகளில் சீனியர் நடிகர்களுடன் நடித்து வருகிறார். தமிழில் அதிக வாய்ப்புகள் அவருக்கு இருந்தும் அவர் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஒரே மொழியை நம்பாமல் பிறமொழி படங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அவரது மார்க்கெட் வேல்யூ இன்னும் எகிறிக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் நயன்தாரா தெலுங்குப் படமான ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ நடித்து வருகிறார். இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்க வருகிறார். இந்தப் படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியானது. ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை பின்புலமாகக் கொண்டு இது தயாராகி வருகிறது. 

இதில் நரசிம்ம ரெட்டி வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இது இவரின் 151-வது படம். இதை ராம் சரண் தயாரிக்கிறார். சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு என பல திரைநட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. இதற்கு 240 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.