சினிமா

‘சுட்டுபிடிக்க உத்தரவு’வில் சண்டைக்காட்சிக்கு முக்கியத்துவம்

‘சுட்டுபிடிக்க உத்தரவு’வில் சண்டைக்காட்சிக்கு முக்கியத்துவம்

webteam

‘சுட்டுபிடிக்க உத்தரவு’ படத்தில் சண்டைக்காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்காக ஃபைடர்ஸ்சுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் இயக்குநர் ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.


இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சுட்டுபிடிக்க உத்தரவு’. இதில் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படம் சம்பந்தமாக சுசீந்திரன் ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “இயக்குநர் ராம்பிரகாஷ், டிஒபி சுஜித், ஃபைட் மாஸ்டர் தினேஷ் இவர்களின் கடினமான உழைப்பில் மிகவும் பிரமாதமாக திரைப்படம் உருவாகி வருகிறது. என்ஜாய் பண்ணி நானும் விக்ராந்தும் ஒர்க் பண்றோம். இந்தப் படத்தில் ஃபைடர்ஸ் கடினமாக உழைக்கின்றனர். அவ்ர்களுக்கு எனது பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக படக்குழு வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைத்துள்ளது.

மேலும் படப்பிடிப்பு சம்பந்தமான பல புதிய புகைப் படங்களை அவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.