இயக்குனர் சுசீந்திரன் இப்போது இயக்கி இருக்கும் படம், ‘அறம் செய்து பழகு’. விக்ராந்த், சந்தீப் கிஷன், மெஹ்ரின், அப்புக்குட்டி, சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். ஒரு மிடில் கிளாஸ் பையனைச்சுற்றி நடக்கும் கதைதான் படம்.
இதுபற்றி சுசீந்திரன் கூறும்போது, ‘நேர்மையா சில விஷயங்களை சிலர் பண்ண நினைக்கிறாங்க. ஆனா, அதை சிலர் தடுக்கிறாங்க. இதுக்கு பல காரணங்கள் இருக்கு. நல்லது பண்ணணும்னு நினைக்கிற ஹீரோ சந்திக்கிற பிரச்னைதான் கதை. அதை கமர்சியலா சொல்றேன்’ என்கிற சுசீந்திரன், விக்ரம் நடிப்பில் ஒரு சரித்திர கதையை உருவாக்கி வைத்திருந்தாராம்.
‘விக்ரம் நடிச்ச ராஜபாட்டை படத்தை நான் பண்ணினேன். அது சரியா போகலை. அதனால அவரை வச்சு நான் பண்ண நினைச்ச சரித்திர படத்தை உருவாக்க முடியாம போச்சு. பாகுபலி பார்த்ததும் என் கதைக்கு நான் யோசிச்சு வச்சிருந்த சில சீன்ஸ் அதுல இருந்தை பார்த்தேன். ஆஹா, மிஸ் பண்ணிட்டோமேன்னு தோணுச்சு. கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது. அந்த கதையில ஹீரோ வெறும் 4 அடிதான்’ என்கிறார் சுசீந்திரன்.
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே, ’இளமை ஊஞ்சலாடுகிறது’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார் சுசீந்திரன்.