சினிமா

தகுதி இருக்கிறவன் எங்கே? சூர்யா அதிரடி வசனம்!

தகுதி இருக்கிறவன் எங்கே? சூர்யா அதிரடி வசனம்!

Rasus

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள "தானா சேர்ந்த கூட்டம்" படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் "தகுதியே இல்லாதவன் எல்லாம் இங்கே. தகுதி இருக்கிறவன் எங்கே" என அதிரடி வசனம் பேசுகிறார் சூர்யா.

`நானும் ரௌடிதான்' படத்தின் வெற்றிக்குப் பின், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இதனால் ரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான ‘சொடுக்கு மேல சொடுக்கு போடுது’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. இதில் "தகுதியே இல்லாதவன் எல்லாம் இங்க இருக்கான். தகுதி இருக்கிறவன் எல்லாம் எங்க போனான்னே தெரியல" என்ற சூர்யாவின் வசனத்தோடு டீஸர் தொடங்குகிறது. "ஒருத்தன் பணக்காரனா இருக்க.. ஒரு கோடி பேரு பிச்சைக்காரனா இருக்கான்.."  என்ற உணர்ச்சிப்பூர்வமான வசனங்களையும் டீஸரில் சூர்யா பேசுகிறார். டீஸரில் சூர்யா மிக இளமையாக காட்சியளிக்கிறார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தற்போது டீஸர் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.