சினிமா

சீமைக் கருவையை அழிக்க வேண்டும்: சூர்யா வலியுறுத்தல்

சீமைக் கருவையை அழிக்க வேண்டும்: சூர்யா வலியுறுத்தல்

webteam

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள சீமைக் கருவை மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

’சிங்கம் 3’ திரைப்படம் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நெல்லை பேரின்ப விலாஸ் திரையரங்கில் நடிகர் சூர்யா தனது ரசிகர்களை சந்தித்துப் பேசினார். அதனைத் அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமைக் கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வருவது வரவேற்கத்தக்கது என்று பாராட்டினார். மேலும், இதேபோன்று கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுத்து சீமைக் கருவை மரங்களை முற்றிலுமாக அழித்ததாக கூறினார்.