நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் பாலவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியை திறந்து வைக்கச்சென்ற வீடியோக்களும், புகைப்படங்களும் ட்விட்டரில் வைரல் ஆகி வருகின்றன.
‘சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
தற்போது, படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. துணை நடிகர்களுக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூர்யா மருத்துவமனையில் இருந்து நலமுடன் திரும்பினார்.
கடைசியாக ரசிகர் ஒருவரின் திருமணத்தில் சூர்யா கலந்துகொண்ட புகைப்படங்கள்தான் வைரலாகி வந்தன. அதன்பிறகு அவரது எந்தப் புகைப்படங்களும் வெளியாகவில்லை. இந்நிலையில், பாலவாக்கத்தில் ஒரு பள்ளியின் திறப்பு விழாவில் சூர்யாவும் ஜோதிகாவும் கலந்துகொண்ட வீடியோவும் புகைப்படங்களும் சூர்யா ஃபேன்ஸ் கிளப் மூலம் பகிரப்பட்டு வருகின்றன.