சினிமா

ரசிகர்களின் காலில் விழுந்த சூர்யா!

ரசிகர்களின் காலில் விழுந்த சூர்யா!

webteam

நடிகர் சூர்யா தனது ரசிகர்களின் காலில் விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் நாளை திரைக்கு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

அப்போது, சூர்யாவின் தீவிர ரசிகர்கள் சிலர் மேடைக்கு அழைக்கப்பட்டனர். உற்சாகத்துடன் மேடைக்கு வந்த அவர்கள், சூர்யாவின் காலில் விழுந்தனர். இதை விரும்பாத சூர்யா, ரசிகர்களிடம் காலில் விழ வேண்டாம் என்றுக் கூறிக்கொண்டே பதிலுக்கு அவர்களின் காலில் விழுந்தார். சூர்யாவின் இத்தகைய செயலைக் கண்ட அரங்கத்தில் இருந்த அனைவரும் திகைத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.