சினிமா

பாண்டிராஜ் இயக்கத்தில் 'சூர்யா 40' படத்தின் பூஜை தொடங்கியது

பாண்டிராஜ் இயக்கத்தில் 'சூர்யா 40' படத்தின் பூஜை தொடங்கியது

webteam

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 40’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

‘சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனாத் தொற்றால் நடிகர் சூர்யா பாதிக்கப்பட்டார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்து தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சூர்யா 40 திரைப்படத்தின் பூஜை இன்று நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா காரணமாக சூர்யா தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், அவர் இல்லாத காட்சிகளை முதலில் படக்குழு படமாக்குகின்றனர்.