யூடியூப்பில் சக்கைப்போடு போடும் ‘சர்வைவா’
விவேகம் படத்தின் சர்வைவா பாடல் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
அஜித் நடிப்பில் வரும் 24ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் விவேகம். அஜித்துடன் இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கிறார். விவேகம் படத்தின் பாடல்கள் யூடியூப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘சர்வைவா’, ‘தலைவிடுதலை’, ‘காதலாட’ ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ‘சர்வைவா’ பாடல் 1 கோடிக்கும் மேல் பார்வையாளர்களை கடந்து 2,35,000க்கும் மேல் லைக்ஸ்-களையும் பெற்றுள்ளது. ‘தலைவிடுதலை’ பாடல் 4.2 மில்லியன் பார்வையாளகளை கடந்து 1,50,000க்கும் மேல் லைக்ஸ்-களையும் பெற்றுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் #SURVIVASongHits1CroreViews என்ற ஹாஷ்டாக்கை உருவாக்கி அதை டிரண்ட் செய்து வருகின்றனர்.
அஜித் படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் வேறலெவலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.