சினிமா

பிக்பாஸ் சீசன் 2ல் கமலுக்கு பதிலாக புதிய நடிகர்

பிக்பாஸ் சீசன் 2ல் கமலுக்கு பதிலாக புதிய நடிகர்

webteam

பிக்பாஸ் சீசன் 2ல் கமலுக்கு பதிலாக புதிய நடிகரை ஒப்பந்தம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன. ஆனால் இதை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

ஹிந்தியில் சல்மான்கான் நடுவராக இருந்து நடத்திய நிகழ்ச்சி பிக்பாஸ். அதன் வெற்றியை தொடர்ந்து தமிழில் அந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன் நடுவராக கமல்ஹாசன் உள்ளே வந்தார். அவர் ஒப்பந்தமான நேரத்தில் அவரை சுற்றி அரசியல் விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. கமலும் பிக்பாஸ் மேடையில் பட்டும்படாமல் அரசியல் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். 

ஆகவே இந்த முறை உருவாக உள்ள சீசன் 2வில் கமல் உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஒரு தகவல் வலம் வருகிறது. இதனிடையே சீசன் 2க்காக சூர்யாவிடம் பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இரண்டாம் பாகம் வேறு தோற்றத்தில் இருக்க வேண்டும் என திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆக, எதிர்பார்ப்பை போலவே பிக்பாஸில் நடுவரும் மாற்றப்படலாம் என்கிறார்கள். சூர்யா ஏற்கெனவே கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் உள்ளவர் என்பதை பலரும் அறிவார்கள்.