சூர்யாவின் ரெட்ரோ web
சினிமா

கங்குவாவிற்கு பிறகு கம்பேக் கிடைக்குமா? சூர்யாவின் ’ரெட்ரோ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ’ரெட்ரோ’. சூர்யா ஜோதிகாவின் 2D Productions, கார்த்திக் சுப்புராஜின் Stone bence நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஒருபக்கம் பயங்கரமான ஹேங்ஸ்டர், மறுபக்கம் அனைத்திலிருந்தும் விடுபட்டு வாழ நினைக்கும் காதல் என படம் லவ்-ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.

ரெட்ரோ ரிலீஸ் தேதி அறிவிப்பு..

சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ். ‘தி ஒன் ஃபிரம் மே 1’ என்ற டேக் லைனுடன் மே மாதம் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் முந்தைய படமான கங்குவா மிகப்பெரிய சரிவை சந்தித்த நிலையில், சூர்யாவிற்கு கம்பேக் கொடுக்கும் படமாக ரெட்ரோ இருக்கும் என்ற நம்பிக்கையில் சூர்யாவின் ரசிகர்கள் இருந்துவருகின்றனர்.