சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.
அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ‘கூட்டத்தின் ஒருத்தன்’ திரைப்படத்தின் இயக்குநரான தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடிக்கிறார் சூர்யா. இப்படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘கர்ணன்’ பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்கிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கினையே ‘ஜெய் பீம்’ படமாக பண்ணுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.