சினிமா

சூர்யாவின் அடுத்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர்

சூர்யாவின் அடுத்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர்

webteam

நடிகர் சூர்யா நடிக்க உள்ள அடுத்த திரைப்படம் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கே.வி. ஆனந்த் இயக்கப்போகும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக செய்தி அடிப்பட ஆரம்பித்திருக்கிறது. இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக சேர இருப்பதால் ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவ ஆரம்பித்திருக்கிறது. இந்தப் படத்தை ஆக்‌ஷன் கலந்த த்ரிலர் படமாக உருவாக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளார். வழக்கமாக இவரது கதைகளை சுபா மட்டுமே எழுதுவார். இந்த முறை பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை வடிவமைக்க இருப்பதாக தெரிகிறது.