’இறுதிச் சுற்று’ வெற்றிப்பட இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ’சூரரைப் போற்று’ படம் விமான தளத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து பாடல்களும் ஹிட் ஆகிவிட்டன.
கொரோனா ஊரடங்கால் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவிருந்த நிலையில், விமானக்கதை என்பதால் இந்திய விமானத்துறையிடமிருந்து அனுமதியும் தடையில்லா சான்றும் தற்போதுதான் கிடைத்தது. இதனால், படத்தின் வெளியீட்டுத்தேதி தள்ளிப்போய் தீபாவளியை முன்னிட்டு படம் வரும் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி 10 மணிக்கு வெளியிடப்படும் என்று சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்திருக்கிறார்.