நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா எக்ஸ் தளம்
சினிமா

தர்ஷன் ஜாமீன் ரத்து | உச்ச நீதிமன்றம் அதிரடி.. மீண்டும் தர்ஷன், பவித்ரா கவுடா சிறையில் அடைப்பு!

நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 5 பேரை போலீசார் கைது சிறையில் அடைத்துள்ளனர்.

PT WEB

நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதன் பேரில் ரேணுகாசாமி என்ற ரசிகர் கன்னட நடிகர் தர்ஷனின் ஆட்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதன் பேரில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், அவருக்கும், வழக்கு சார்ந்த பலருக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தது.

எந்த சொகுசு வசதியும் கூடாது..

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட மொத்தம் 17 பேர்  கடந்த 2024 ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களில், 10 பேருக்கு ஜாமீன் கிடைத்தது. அதன் பின், கர்நாடக உயர் நீதிமன்றம் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட ஏழு பேருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமின் வழங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் பர்திவாலா, மகேந்திரன் ஆகியோர் முன் விசாரணை நடந்து வந்தது. வாதம், பிரதிவாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு கூறாமல் நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

நடிகர் தர்ஷன்

இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், தர்ஷன் உள்பட 7 பேருக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.

தொடர்ந்து சட்டத்தின் முன் யாரும் பெரியவர்கள், சிறியவர்கள் கிடையாது அனைவரும் சமம், சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வாழ்க்கை அமைத்து கொடுத்த அதிகாரிகளை ஏன் பணியிடம் நீக்கம் செய்யவில்லை என கேள்வியும் எழுப்பியுள்ளது. மேலும் இவர்களுக்கு சிறையில் எந்த சொகுசு வாழ்கையும் அமைத்து தரக்கூடாது, சாதாரண கைதியாக கருத வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தர்ஷன்

மேலும் மத்திய சிறைச்சாலையில் புகை பிடிக்க யாருக்கும் அனுமதிக்க கூடாது என தெரிவித்து உடனடியாக தர்ஷன் உட்பட ஏழு பேரையும்  கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

கைது செய்யப்பட்ட தர்ஷன், பவித்ரா..

இதையடுத்து பெங்களுரில் வீட்டில் இருந்த நடிகை பவித்ரா கவுடா உள்பட மூன்று பேரை போலீசார் பிற்பகல் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து தர்ஷனை சுங்கச்சவடி உள்பட பல இடங்களில் போலீசார் தேடி வந்த நிலையில், ஹோசஹரஹள்ளியில் உள்ள அடுக்குமாடியில் 15வது தளத்தில் நடிகர் தர்ஷன் மனைவி விஜயலட்சுமி வீட்டிற்கு செல்லும் போது  கைது செய்து அவரை அன்னபூர் னேஸ்வரி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

நடிகர் தர்ஷன்

தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்ஷன், பவித்ரா, பிரசோத், நாகராஜ், லக்ஷ்மன் ஆகிய 5 பேரை  காவல் நிலையத்தில் இருந்து  கோரமங்களவில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஈரப்பனா பவடி நாயக் வீட்டுக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து நீதிபதி 5 பேரையும்  நீதிமன்ற காவலில் வைக்க  உத்தரவிட்டார். தொடர்ந்து 5 பேரையும் போலீசார் பரத் மகர ஹர மத்திய சிறையில் அடைத்தனர்