சினிமா

டிஜிட்டலில் மூன்றுமுகம்! ரஜினி ஆசை

டிஜிட்டலில் மூன்றுமுகம்! ரஜினி ஆசை

webteam

ரஜினியின் பாட்ஷா படம் டிஜிட்டலில் வெளியாகி வரவேற்பு பெற்றதை அடுத்து அவர் நடித்த மூன்று முகம் படத்தையும் டிஜிட்டலில் வெளியிட முயற்சி நடந்து வருகிறது.

ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஜனகராஜ் நடித்து சூப்பர் ஹிட்டான படம், பாட்ஷா. 1995-ல் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். இன்றளவும் ரசிகர்களிடையே பேசப்படும் இந்தப் படம், சமீபத்தில் டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. இதை ஆர்.எம். வீரப்பனின் மகன் தங்கராஜ் வெளியிட்டார். அவர் கூறும்போது, படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் ரஜினி சார், என் அப்பாவை சந்தித்துப் பேசினார். அப்போது பாட்ஷா குறித்தும் அதற்கு கிடைத்த வரவேற்பு கிடைத்தும் கேட்டறிந்தார். பின்னர் பாட்ஷாவைப் போன்று மூன்றுமுகம் படத்தையும் டிஜிட்டலில் வெளியிட வேண்டும் என்ற தனது ஆசையை சொன்னார். அதற்கான வேலை நடந்து வருகிறது’என்றார் தங்கராஜ்.