எமி ஜாக்சன் டி.வி.சீரியலில் நடிக்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். விக்ரமுடன் ஐ, விஜய் உடன் தெறி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது அவர் சி டபிள்யு என்ற தொலைக்காட்சியில் 'சூப்பர் கேர்ள்' என்ற தொடரில் சான்டர்ன் கேர்ள் என்ற பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சீரியல் வரும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் சி டபிள்யு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. ஹாலிவுட்டில் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பிரபல இயக்குநர்களும் முன்னணி நடிகர்களும் டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது இந்த பட்டியலில் எமியும் இணைந்துள்ளார்.