சினிமா

சூப்பர் டீலக்ஸின் ’டிங் டாங்’ வீடியோ ப்ரோமோ : அசத்தும் விஜய்சேதுபதி

சூப்பர் டீலக்ஸின் ’டிங் டாங்’ வீடியோ ப்ரோமோ : அசத்தும் விஜய்சேதுபதி

webteam

நடிகர் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் ‌படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் இரண்டாவது படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்சேதுபதி இதில் திருநங்கையாக நடித்துள்ளார். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிங் டாங் என்ற புரோமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் சேதுபதி அசத்தலாக நடித்துள்ளதாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.