சென்னை அருகேயுள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற சன்னி லியோனியின் நடன நிகழ்ச்சியை அவரது ரசிகர்கள் கண்டுகளித்தனர். இருப்பினும் குறைந்த அளவு கூட்டமே காணப்பட்டது.
ஈவிபி பிலிம் சிட்டியில் பிரபல திரைப்பட நடிகைகள் சன்னி லியோனி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 3,000 பேர் வரை நிகழ்ச்சியை காண வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிக்கெட் விலை 5,000, 8,000 ரூபாய் என விற்கப்பட்டதால் குறைந்தளவே கூட்டம் வந்திருந்தது.
சன்னி லியோனியின் நடனம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கூட்டம் குறைவாக இருந்ததால் ஏமாற்றமடைந்தனர்.