சினிமா

வாங்கிய பணத்தை தர மறுத்தாரா நடிகை சன்னி லியோன்?

வாங்கிய பணத்தை தர மறுத்தாரா நடிகை சன்னி லியோன்?

webteam

இந்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக, கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகையை நடிகை சன்னி லியோன் தரமறுப் பதாக, தயாரிப்பாளர் புகார் கூறியிருந்தார். ஆனால், இதை சன்னி லியோன் மறுத்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை சன்னி லியோன். இவர் தமிழில் ’வடகறி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் ’வீரமாதேவி’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இந்தியில் உருவாகும், ’படேல் கி பஞ்சாபி ஷாதி (பட்டேலின் பஞ்சாபி திருமணம்)’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்பந்தம் ஆகியிருந்தார்.

இதற்கு சம்பளமாக ரூ.40 லட்சம் பேசி, ரூ.5 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் ஆடிகொடுக்க மறுக்கிறார் என்றும் கொடுத்த அட்வான்ஸ் தொகையையும் தர மறுப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் பரத் படேல் புகார் கூறியிருந்தார். இந்த புகார் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சன்னி லியோன் தரப்பு, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ‘’சன்னி லியோன் அந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டது உண்மைதான். ஆனால், அவர்கள் சொன்ன தேதியில் பாடலை எடுக்கவில்லை. பலமுறை தேதியை மாற்றி னார்கள். இதனால், கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டது. மற்ற படத்துக்கு கொடுத்த தேதியில் நடிக்க அழைத்தால் என்ன செய்ய முடியும்?’’ என்று தெரிவித்துள்ளது.