சினிமா

அமெரிக்காவில் பங்களா வாங்கினார் சன்னி !

அமெரிக்காவில் பங்களா வாங்கினார் சன்னி !

Rasus

நடிகை சன்னி லியோனும் அவரது கணவர் டேனியலும் சேர்ந்து பிரமாண்ட பங்களா ஒன்றை வாங்கியுள்ளனர்.

இந்திப் படங்களில் நடித்துவருபவர் சன்னி லியோன். சமீபத்தில் 36-வது பிறந்த நாளை கொண்டாடிய இவர் அமெரிக்காவில் புதிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். ஷெர்மன் ஓக்ஸ் என்ற இடத்தில் இவரும் கணவர் டேனியல் வெப்பரும் வாங்கியுள்ள இந்தப் பங்களாவில் 5 பெட்ரூம், நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், கார்டன் என உள்ளன.

‘சன்னியும் நானும் இந்த இடத்தை வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தோம். அது இப்போது நடந்திருக்கிறது. இத்தாலி, ரோம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்து கலைப்பொருட்களை வாங்கி வைத்திருக்கிறோம். பங்களாவை அழகுபடுத்தும் பொருட்களை வாங்குவதற்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டிருக்கிறோம்’ என்று கூறியுள்ளார் டேனியல்.