பிரபல மலையாள நடிகை, மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட மஞ்சு, கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்துப் பெற்றார். இதையடுத்து திலீப், நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார். மஞ்சு வாரியர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
Read Also -> இயக்குனர் பிரியதர்ஷனுக்கு கிஷோர் குமார் விருது!
இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை வெள்ளம் கேரளாவை புரட்டிப் போட்டிருக்கிறது. பலர் தங்கள் உடமைகளை இழந்திருக்கின்றனர். சிறுக சிறுக சேர்த்த அனைத்தையும் இழந்துவிட்டு பலர் நிர்கதியாகியுள்ளனர். இன்னும் ஏராளமானோர் நிவாரண முகாம்களிலேயே தங்க வைக்கப் பட்டுள்ளனர். மாநிலத்தில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில் சொத்துக்களை, சொந்தங்களை இழந்த பலர், துக்கம் தாளாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதையறிந்த மஞ்சுவாரியர், அவர்களுக்கு அதரவாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘தற்கொலை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது. மக்கள் பிரச்னைகளை தைரியமாக எதிர்கொண்டு அதில் இருந்து வெளிவரவேண்டும். ஒவ்வொருவருக்கு உள்ளும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியம் மறைந்திருக்கிறது. அந்த போராட்டக் குணத்தை, தைரியத்தை விழித் தெழ செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு தற்கொலை செய்வது தீர்வாக அமையாது. அது உங்களுக்கு நெருக்கமானவர்களை துன்பத்தில் தான் தள்ளும்.
இந்த மழைவெள்ளத்தில் எதையெல்லாம் இழந்தோமோ, அதெல்லாம் நம்மால் உருவாக்கப்பட்டதுதான். அதனால் அதை நம்மால் மீண்டும் கட்டி எழுப்ப முடியும். உருவாக்க முடியும். உங்கள் புதிய வாழ்க்கையை உருவாக்க, இந்த மொத்த உலகமும் உங்களுடன் இருக்கிறது.
அதோடு மீடியாவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தற்கொலை செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது மற்றவர்க ளுக்கும் எதிர்மறை எண்ணங்களைத்தான் உருவாக்கும்’ என்று கூறியுள்ளார்.