ஞானவேல் - அமீர்- சுதா கொங்கரா
ஞானவேல் - அமீர்- சுதா கொங்கரா pt web
சினிமா

“இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்” - கொளுத்திப்போட்ட ஞானவேல் ராஜா.. சுதா கொங்கரா திடீர் பதிவு

Angeshwar G

பருத்திவீரன் திரைப்படம் விவகாரத்தில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குநர் அமீர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குநர் அமீர், நடிகர் சசிகுமார் போன்றோர் கண்டனங்களை தெரிவித்திருந்தார்.

நேற்று இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார். அதில், “அந்த படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசிவரைக்கும் இருந்தவன் நான்...எல்லா பிரச்னையும் எனக்கு தெரியும்.... ஆறு மாசம் "பருத்திவீரன்" படப்பிடிப்பிலே இருந்துருக்கேன்... ஆனா உங்கள ஒருநாள் கூட அங்க பாத்தது இல்ல.. நான்தான் தயாரிப்பாளர், நான்தான் தயாரிப்பாளர் னு பேசிக்கிட்டே இருக்கிறீங்க..

பருத்தி வீரன் விவகாரம்

எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்..? பருத்திவீரன் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்போதெல்லாம் சரி நமக்கெதுக்கு. அவங்களே பேசிக்குவாங்க...அவங்களே தீத்துக்குவாங்க..அப்படின்னு தான் நான் இருந்தேன் ஆனா இந்த முறை அப்டி இருக்க முடியல.. ரொம்ப கஷ்டமா இருக்கு...

அந்த படத்தை முடிக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும்,அமீர் அண்ணனோட சொந்தக்காரங்க, நண்பர்கள், இப்படி ஒவ்வொருத்தர்கிட்டயும் அவர் சொல்லச்சொல்ல போய் ஒரு லட்சம். ஐம்பதாயிரம், ரெண்டு லட்சம் இப்டி வாங்கிட்டு வந்தவன் நான்.. இது இல்லாம தம்பி சசி கூட கொஞ்சம் பணம் கொடுத்திருக்கான் பிரதர் அந்த படத்துக்கு... அந்த பஞ்சாயத்து வந்தப்ப யார் வேணாலும், என்ன வேணாலும் பேசியிருக்கலாம். ஆனா களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறதத் தான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல...

சரவணன் | கார்த்தி

நீங்களெல்லாம் ஏதோ ஒண்ணரை கோடிக்கு கணக்கு கேட்டுட்டு இருக்கீங்க ஞானவேல்...! செலவு பண்ணது அதுக்கும் மேல...அதெல்லாம் பாவம்... கணக்கிலேயே இல்ல! அமீர் அண்ணனோட பணம் அது..” என காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “ராம் திரைப்படம் ரிலீஸ் ஆகி 25 நாட்கள் ஆனது. அப்போது நடிகர் கார்த்தி நான் படம் பார்க்க வேண்டும் என கூறியிருண்தார். அப்போது கார்த்தி, சுதா கொங்கரா ஆகியோர் மணிரத்னம் உதவியாளராக இருந்தனர். ஆல்பர்ட் தியேட்டரில் பாக்ஸ் ஃபிக்ஸ் பண்ணி நான், சுதா, கார்த்தி என மூன்று பேரும் படம் பார்த்தோம். அப்போது சுதா, “மேக்கிங் வரல ஒன்னும் வரலன்னு ஒரு கமெண்ட் அடித்தார். கார்த்தி 50:50 என்ற மனநிலையில் இருந்தார்” என கூறியிருந்தார். இந்த பகுதி மட்டும் இணையத்தில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா தனது எக்ஸ் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். அதில், “பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்... எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்... நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்... என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகியின் பாதிப்புதான் என்று.

ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை... இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி...” என தெரிவித்துள்ளார். தற்போது இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால், விவாதத்திற்குரிய ராம் படம் குறித்து எதுவும் சுதா கொங்கரா கருத்து சொல்லவில்லை. அதனால் ராம் படம் குறித்த அவரின் கருத்து அதுவே தானா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அதேபோல், ராம் படத்தின் மேக்கிங் உலக தரத்தில் இருக்கும் என்று பலரும் சிலாகித்து வருகின்றனர்.

இதனிடையே, “‘மெளனம் பேசியதே’ என்று தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் இயக்குநர் அமீர் ! இன்று மெளனம் உடைத்து பேசிய தம்பி சசிக்குமார் @SasikumarDir சமுத்திரக்கனி @thondankani இருவரும் தொடக்கமே! பருத்திவீரனில் பங்காற்றிய பிற கலைஞர்களும் பேச வேண்டும் !

@Karthi_Offl கார்த்தி உட்பட !!” என்று இயக்குநர் கரு.பழனியப்பன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.