சினிமா

வரிப்பணம் வீணாகிறது: அரவிந்த்சாமி கவலை

வரிப்பணம் வீணாகிறது: அரவிந்த்சாமி கவலை

webteam

தனியார் விடுதியில் பொழுதை களிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என நடிகர் அரவிந்த்சாமி கவலை தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் அரவிந்த் சாமி, தனியார் விடுதியில் பொழுதை களிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஏராளமான காவல்துறையினர் விடுதியின் முன்பு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என பதிவிட்டுள்ளார்.