ஸ்டண்ட் கலைஞர் கோதண்டராமன் முகநூல்
சினிமா

மறைந்தார் ஸ்டண்ட் கலைஞர் கோதண்டராமன்!

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய கோதண்டராமன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ராம்கி நடிப்பில் வெளியான எல்லாமே என்பொண்டாட்டிதான், சிவாஜி நடித்த எல்லாமே என் ராசாதான், ஒன்ஸ்மோர் போன்ற பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் கோதண்டராமன்.

துணை சண்டைப்பயிற்சியாளராக பகவதி, திருப்பதி, கிரீடம் , வேதாளம் போன்றவற்றிலும் பணியாற்றியுள்ளார். கடந்த, 2012 ல் சுந்தர் சி இன் கலகலப்பு திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான இவர் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

இப்படி தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தநிலையில்,கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான், இன்று காலையில் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

65 வயதான கோதண்டராமன் உடலுக்கு திரையுலகினர், ஸ்டண்ட் கலைஞர்கள் உள்ளிட்டோர் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.