தமிழ் காமெடி நடிகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை, சமூக வலைத்தள ரசிகர்களுக்கு திடீர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவணப்பட இயக்குனர் லீலா மணிமேகலை, நடிகை அமலா பால் ஆகியோர் இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகாரை முன்வைத்தி ருந்தனர். அந்த வரிசையில் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகாரை மீ டூ மூலம் வெளிப்படுத்தினார். இது தொடர்பாக இருவரும் மாறி மாறி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கன்னட நடிகை சங்கீதா பட் என்பவரும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் பற்றி முகநூலில் குறிப்பிட்டிருந்தார். இவர் தமிழில் ’லொள்ளு சபா’ ஜீவா நடித்த ’ஆரம்பமே அட்டகாசம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது சினிமாவில் இருந்து விலகிவிட்ட அவர், தனது 15 வயதில் சினிமாவுக்கு வந்ததாகவும் முதல் பட அனுபவமே கசப்பானது என்றும் மூன்று பக்க அளவில் பரபரப்பு பாலியல் புகார் கூறியிருந்தார்.
அதில், ‘அப்போது எனக்கு 15 வயது. ஒரு படத்தில் நடிப்பதற்காக ஒரு காஸ்டிங் இயக்குனர் என்னை அழைத்தார். என் அம்மாவிடம், ’ஒரு சகோதரனைப் போல உங்கள் மகளை பார்த்துக்கொள்கிறேன்’ என்று உறுதியளித்தார். பின்னர் சில காஸ்ட்யூம்களை எடுத்துக்கொண்டு, அவர து அலுவலகத்துக்கு காரில் அழைத்துச் சென்றார். யாருமற்ற இடத்தில் காரை நிறுத்தி என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். நான் அதிர்ந்துவி ட்டேன். அண்ணன் மாதிரி என்றவர் இப்படி நடந்துகொண்டதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்று கூறியிருந்தார்.
இப்படி பல சம்பவங்களை கூறியுள்ள அவர், தமிழ் காமெடி நடிகர் மீதும் பரபரப்பு புகாரைக் கூறியிருந்தார். ‘2016-ல் தமிழில் ஒரு படத்தில் நடித்தேன். டிவி காமெடி நடிகர் ஹீரோவாக நடித்தார். தொடக்கத்தில் இருந்தே என்னிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந் தார். நான் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்து, புன்னகையுடன் அவரைத் தவிர்த்தேன். ஒரு காட்சியில் நான் அவருடன் பைக்கின் பின்னா ல் உட்கார வேண்டும். காட்சி படமாக்கப்படும்போது, வேகமாக சென்ற பைக்கை திடீரென்று நிறுத்தி, ‘நீங்க அந்த பிராவா அணிஞ்சிருக்கீங்க? உள்ள ஒண்ணுமே இல்லை’ என்று தமிழில் கேட்டார்’ எனத் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சில ஹீரோக்கள் ஆகியோரின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடாமல் அவர்களால் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளைக் குறிப்பிட்டிருந்தார்.
சங்கீதா பட்டின் இந்த புகாருக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பும் ஆதரவும் பெருகியது. அதில் மோதலும் ஏற்பட்டது. சில கன்னட ரசிகர்கள் சங்கீதாவை ஆபாசமாக விமர்சித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தள ரசிகர்களிடம், தயவு செய்து என்னை மோசமாக சித்தரிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சங்கீதா பட்.
‘நான் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன். இனி எனக்கு பப்ளிசிட்டி தேவையில்லை. இதை வைத்து ஆதாயம் தேட வேண்டிய அவசியமும் இல்லை. நான் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. அது தேவையும் இல்லை. இன்டஸ்ட்ரியில் எனக்கு மோசமான பெயர் ஏதும் இல்லை. ஆனால் இந்த சம்பவங்கள் எனக்கு பிரச்னையை ஏற்படுத்தின என்பதால்தான் வெளிப்படுத்தினேன். இப்போது அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் பெயரை தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.