கோலிவுட்டின் பல நட்சத்திரங்கள் பல விசித்திரமான சூழ்நிலைகள் குறித்து ட்வீட் செய்துள்ளனர். மேலும் #TheVictim ஹேஷ்டேக்குடன் ஒருவரை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
உதாரணமாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ‘’ஒவ்வொரு முறையும், கடும் மழைக்கு சென்னை இரையாகிறது. இதற்கு தீர்வே கிடையாதா?’’ என்று பதிவிட்டதுடன், அந்த ட்வீட்டை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு டேக் செய்திருந்தார். மேலும் அந்த ட்வீட்டில் #TheVictim என்ற ஹேஷ்டேக்கையும் சேர்த்திருந்தார்.
மழை பாதிப்பு குறித்த பதிவில் ஐஸ்வர்யா ராஜேஷை ஏன் டேக் செய்தார்? #TheVictim என்ற ஹேஷ்டேக் எதைக் குறிக்கிறது என்ற குழப்பத்தில் நெட்டிசன்கள் உள்ளனர்.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் பக்கத்திற்கு சென்று பார்த்தால், ‘’நான் சாலை சீற்றத்திற்கு பலியாகிவிட்டேன்’’ என்ற ட்வீட்டை #TheVictim என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு, அதனை ஆர்.ஜே.பாலாஜிக்கு டேக் செய்துள்ளார்.
இந்த #TheVictim ஹேஷ்டேக் எதைக் குறிக்கிறது என்பதற்கு விடை தெரியாமல் நெட்டிசன்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். சென்னை முழுவதும் ‘அடுத்தது யார்’ என்ற மொட்டை சுவர் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிக்கும் #TheVictim ஹேஷ்டேக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா? பிரபலங்கள் ஏதேனும் மீ டூ மாதிரியான இயக்கத்துடன் கைகோர்க்கப் போகிறார்களா? என ஏகப்பட்ட கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.