சினிமா

'தளபதி' ரஜினி லுக்கில் ஹரிஷ் கல்யாண் - ’ஸ்டார்’ ஃபர்ஸ்ட் லுக்!

sharpana

தளபதி பட ரஜினி லுக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ’ஸ்டார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்தது. இப்படத்தை தயாரித்து இசையமைத்தார் யுவன் ஷங்கர் ராஜா.

ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்த பியார் பிரேமா காதல் படத்தின் கதை ஃப்ரெஷாகவும் வித்யாசமான காதல் கதை என்பதாலும் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்ததாலும் படமும் சூப்பர் ஹிட் ஆனது.

இதனால், மீண்டும் இக்கூட்டணி இணைகிறது என்று சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில், ரஜினியின் பிறந்தநாளையொட்டி ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், தளபதி பட ரஜினி கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் ஆசம் சொல்ல வைக்கிறார். அச்சு அசலாக தளபதி பட ரஜினியை நினைவூட்டுவதால் சமூக வலைதளங்களில் இந்தப் படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

ஆனால், இம்முறை ஸ்டார் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக மட்டும்தான் பணிபுரிகிறார், என்பது குறிப்பிடத்தக்கது.