சினிமா

 ‘அசுரன்’ படம் மட்டுமல்ல பாடம் - ஸ்டாலின் பாராட்டு

webteam

அசுரன் படம் மட்டுமல்ல பாடம் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல் ‘வெக்கை’.  இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ’அசுரன்’. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல பாராட்டை பெற்று வருகிறது. 

இந்நிலையில், அசுரன் படம் மட்டுமல்ல பாடம் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.