எஸ்.எஸ்.ராஜமவுலி எக்ஸ் தளம்
சினிமா

பிரமாண்டமான முறையில் தயாராகும் ராஜமவுலியின் அடுத்த படம்.. தான்சானியாவில் படப்பிடிப்பு!

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் நடைபெற உள்ளது.

PT WEB

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் நடைபெற உள்ளது. 100 பேர் பங்கேற்கும் பிரமாண்ட சண்டைக்காட்சி அடுத்த மாதம் படமாக்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஒத்திகைகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தற்காலிகமாக SSMB 29 என பெயரிடப்பட்டுள்ள இப்படம் இந்தியாவிலேயே முன்எப்போதும் இல்லாத அளவில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இறவாநிலையை தரக்கூடிய சஞ்சீவினி மூலிகையை கதாநாயகன் தேடிச்செல்லும்போது எதிர்கொள்ளும் சவால்களே படத்தின் கதையாகும்.

இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் மகேஷ் பாபு அக்கதாபாத்திரத்தை ஏற் 6 மாதங்கள் பயிற்சி பெற்றுள்ளார். பிருத்விராஜ் சுகுமாரன் வில்லனாகவும் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் 2027ஆம் ஆண்டும் 2ஆம் பாகம் 2029ஆம் ஆண்டும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.