பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜீரோ திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்துள்ளார்.
தமிழ்த்திரையுலகில் முன்னணி நாயகியாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி, பின்னர் பாலிவுட்டிலும் முக்கிய இடத்தை பிடித்தார். அவர் பாலிவுட்டில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். அண்மையில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஸ்ரீதேவி நடித்த இரண்டாவது திரைப்படம் தான் ஜீரோ. இத்திரைப்படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வரும் ஸ்ரீதேவி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இவர் நடிக்கும் காட்சிகள் ஏற்கனவே முழுமையாக படமாக்கப்பட்டுவிட்டது.
இத்திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வெளியாகிறது. ஸ்ரீதேவி மறைந்த பின்னர் வெளியாகும் திரைப்படம் என்ற சிறப்பை ஜீரோ பெற்றுள்ளது.