13 இருக்கைகள் கொண்ட அனில் அம்பானியின் ஜெட் விமானத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கொண்டு வரப்படவுள்ளது.
துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றுள்ளார். ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு, மும்பையிலிருந்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் அனில் அம்பானியின் 13 இருக்கைகள் கொண்ட தனி விமானம் துபாய் விரைந்துள்ளது.
இந்த விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் இன்று நள்ளிரவு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவரின் உடல் நாளை இந்தியா கொண்டுவரப்படலாம் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மும்பையில் நண்பகல் 12.30 மணியளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் எனத்தெரிகிறது.