தனது மகள் ஜான்வியை சினிமாவில் அறிமுகப்படுத்த மொழி ஒரு தடையல்ல எனத்தெரிவித்துள்ளார் முன்னாள் கனவுக்கன்னி ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவிக்கு இருமகள்கள். மூத்தவர் ஜான்வி. இளைவர் குஷி. தற்போது 19 வயதான தனது மூத்த மகள் ஸ்ரீதேவியை சினிமாவில் நடிகையாக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார் ஸ்ரீதேவி. கரன் ஜோஹர் இயக்கத்தில் ஹிந்தியில் ஜான்வி அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை அவர் தமிழ் சினிமாவில் முதலில் நடிக்க இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீதேவியிடம் கேட்டபோது. ‘எனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்த மொழி ஒரு தடையல்ல. நான் அப்படி நினைத்துப்பார்த்ததும் இல்லை. அதே வேளை நல்ல கதையாக இருக்க வேண்டும்’ என அவர் தெரிவித்தார். ஸ்ரீதேவி நடித்துள்ள ’மாம்’ படத்தின் புரமோசன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த அவர் இதனைத் தெரிவித்தார். மாம் படம் ஜூலை 7ம் தேதி வெளியாக இருக்கிறது.