சினிமா

ஸ்ரீதேவியின் உடல் ஒப்படைப்பு: அடுத்தது எம்பாமிங்!

ஸ்ரீதேவியின் உடல் ஒப்படைப்பு: அடுத்தது எம்பாமிங்!

webteam

துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கிருந்தபோது மரணமடைந்தார். முதலில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் உடற்கூறு ஆய்வில் அவர் குளியல் தொட்டியில் விழுந்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் உடலில் ஆல்கஹால் படிமங்கள் இருந்ததாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே ஸ்ரீதேவியின் மரண செய்தி வெளியானதும், குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடலை காண, மும்பையில் உள்ள அவரது வீட்டின் மூன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவர, அனில் அம்பானியின் 13 இருக்கைகள் கொண்ட தனி ஜெட் விமானம் துபாய் விரைந்தது. எனவே அன்று இரவே ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வரும் என கூறப்பட்டது. ஆனால் மருத்துவ பரிசோதனை, துபாய் அரசியல் சட்டமுறை, உடற்கூறு ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீதேவியின் உடல், வரவில்லை. இந்நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தான் ஸ்ரீதேவியின் உடல், அவரது கணவர் போனி கபூரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீதேவியின் உடலுக்கு எம்பாமிங் செய்யப்படவுள்ளது. பின்னர் தான் அவரது உடல் மும்பை வரும் என்று கூறப்படுகிறது.