சினிமா

“'ஸ்க்விட் கேம்' வேற லெவல் தொடராக மாறும்” - நெட்ஃப்ளிக்ஸ் இணை சிஇஓ நம்பிக்கை

“'ஸ்க்விட் கேம்' வேற லெவல் தொடராக மாறும்” - நெட்ஃப்ளிக்ஸ் இணை சிஇஓ நம்பிக்கை

கலிலுல்லா

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'ஸ்க்விட் கேம்' இணைய தொடர் மிகப்பெரிய அளவில் பிரபலமடையும் என நெட்ஃப்ளிக்ஸின் இணை சிஇஓ தெரிவித்துள்ளார்.

நெட்ஃப்களிக்ஸ் தளத்தில் 'ஸ்க்விட் கேம்' என்ற வெப்சீரிஸ் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நெட்ஃப்ளிக்ஸின் இணை சிஇஓ டெட் சரண்டோஸ் கூறுகையில், ''நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள கோரியன் இணைய தள தொடர் 'ஸ்க்விட் கேம்' உலகம் முழுவதும் வெற்றிகரமான பிரபலமான தொடராக மாறும். உலக அளவில் ஆங்கிலமல்லாத வெப்சீரிஸ்களில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற தொடராக இது இருக்கும். தொடர் வெளியாகி 9 நாட்களே ஆகியுள்ளது. இது எங்களின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கும். பிரபலமடையும்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னதாக உலக அளவில் பிரபலமடைந்த மணி ஹெய்ஸ்ட், லூபின் போன்ற ஆங்கிலம் அல்லாத வேறு மொழி தொடர்களைக்காட்டிலும் 'ஸ்க்விட் கேம்' நெட்ஃப்ளிக்ஸின் மிகப்பெரிய பிரபலமான தொடராக மாறும் என உறுதிபட கூறியுள்ளார்.

கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் எழுதி இயக்கியுள்ள இந்த தொடரானது கடந்த 17ம் தேதி வெளியானது. வெளியான உடனேயே நெட்ஃபிளிக்ஸின் உலக புகழ்பெற்ற 10 வெப்சீரிஸ்களில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.