அண்மையில் உலகம் முழுவதும் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.
புகழ்பெற்ற ஸ்பைடர்மேன் பட வரிசையில் எட்டாவதாக வெளியாகியிருக்கிறது 'Spider-Man: No Way Home' திரைப்படம். கடந்த பாகங்களில் கிட்டத்தட்ட ஒரே கதை, வெவ்வேறு நடிகர் என இருந்ததை மாற்றி இந்த முறை ரசிக்கும்படியான கதைக்களத்தை அமைத்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் க்ரிஷ் மெக்கென்னா மற்றும் எரிக் சோம்மர்ஸ்.
Spider-Man: No Way Home திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இது 1500 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவானதாக கூறப்படும் நிலையில், வெளியான முதல் வாரத்தில் 2 மடங்கு கூடுதலாக, அதாவது 4,500 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருக்கிறது. அதிலும் அமரிக்காவில் மட்டும் ரூ.2,000 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.