சினிமா

ரஜினி ஜாதகத்தை வைத்து ரசிகர்கள் சிறப்பு யாகம்

ரஜினி ஜாதகத்தை வைத்து ரசிகர்கள் சிறப்பு யாகம்

Rasus

மதுரையில் நடிகர் ரஜினிகாந்த் ஜாதகத்தை வைத்து ரசிகர்கள் சிறப்பு யாகம் செய்து வழிபட்டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் சரவணபொய்கையில், திருப்பரங்குன்றம் ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் சார்பில், ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் பெற வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது. தமிழக அரசியலில் அவர் தலைமையேற்று எதிரிகளை வென்று அரசியல் களத்திலும் பலம் பெற வேண்டி, சிறப்பு யாகம் நடத்தியதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.

சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் ரஜினி நாட்டில் சிஸ்டம் சரியில்லை என தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசியலுக்குள் ரஜினி அடியெடுத்து வைக்கப் போகிறார் என பல விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. ரசிகர்களும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தினர். இந்நிலையில் ரஜினிகாந்த் ஜாதகத்தை வைத்து சிறப்பு யாகம் செய்து வழிபட்டுள்ளனர்.