Jung Chae Yull f Facebook
சினிமா

Zombie Detective வெப் சீரிஸ் நடித்த இளம் நடிகை மர்ம மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

Zombie Detective என்ற பிரபல கொரியன் சீரிஸில் நடித்து, புகழ்பெற்ற நடிகை உயிரிழந்தார்.

Justindurai S

தென்கொரியாவை சேர்ந்த இளம் நடிகை ஜங் சே-யல் (வயது 26). 2016-ம் ஆண்டில் டெவில்ஸ் ரன்வே என்ற ரியாலிட்டி தொடர்களில் மாடலாக அறிமுகமான அவர், பின்பு ஜாம்பி டிடெக்டிவ் என்ற நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்தது அவரை ரசிகர்களிடையே பிரபலமடைய செய்தது.

காமெடி தொடர்களிலும் நடித்துள்ள அவர், 2018-ம் ஆண்டு வெளியான டீப் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் வெடிங் இம்பாசிபிள் என்ற தொடரில் முன்னணி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ஜங் சே-யல் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு இடியாக வந்திறங்கியுள்ளது.

ஜங் சே-யல் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இதனை அவரது எஸ் என்ற மேலாண் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 'அவரது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு ஏற்ப, இறுதி சடங்குகள் தனிப்பட்ட முறையில் நடைபெறும். அவருக்காக இறைவனிடம் வேண்டி கொள்வீர்கள் என நம்புகிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்' என அவரது நிர்வாகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.